Saturday, March 20, 2021

அப்பாவைப் போல...............

                                            அப்பாவைப் போல...............

 அவ்வளவு எளிதில் 

வந்துவிடாது அழுகை

எனக்கு..........

ஆனாலும்

சில பாடல்வரிகள்  முன்

தோற்றுப்போகிறதென்

வீராப்பு........

எப்போதும்  உர்ர் எனறிருக்கும்

அப்பாவுக்கு  

அழுகாட்சிக் காட்சிகளைப் பார்த்தால்

மூக்கிலும் கண்ணீர் வழியும்............

ஹிட்லரென்று பட்டைப் பெயர் 

சுூட்டிய எங்களுக்கது

 நகைச்சுவைக்காட்சி தான் அன்று.....

ஆனாலும் இன்று

சில பாடல்வரிகள் முன்

தோற்றுப்போகிறதென்

வீராப்பு........

அப்பாவைப் போல..............



(பாடல் 1 .யார் என்ன சொன்னாலும்.படம்-ஆம்பள (ஆனா பாட்ட பத்தி மட்டும் தாங்க சொல்றேன்))